இதாங்க, கிம் கர்தஷியான் பொண்ணு ‘நார்த் வெஸ்ட்’
லாஸ் ஏஞ்சல்ஸ்: ரியாலிட்டி ஸ்டாரான கிம்முக்கும், வெஸ்ட்டுக்கும் சமீபத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையான நார்த் வெஸ்ட்ன் போட்டோவைப் பார்ப்பதற்கு உலகமே காத்துக் கிடந்தது. பல பத்திரிக்கைகள் பல கோடி பணம் தந்து அப்படத்தின் உரிமையை வாங்கத் தயாரான நிலையில், சமீபத்து நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளின் படத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கென்யே வெஸ்ட்.
சில பிரபலக்களின் குழந்தைகள் தான் கருவான நாள் முதற்கொண்டே பரபரப்பைக் கிளப்பி விடுவார்கள். அந்த வகையில் கிம்கர்தஷியான் மகளான நார்த் வெஸ்ட்ம் ஒருவர்.
கிம் கர்ப்பமான நாள்தொட்டு அவரின் ஒவ்வொரு அசைவையும் மீடியா பார்ப்பரசிகள் காசாக்கி வந்தார்கள். ஆனால், கிம் அவரது மகளின் போட்டொவை மட்டும் பத்திரிக்கைகளுக்கு தர மறுத்து வந்தார். இந்நிலையில் அவரது கணவரான கென்யே வெஸ்ட் சமீபத்தில் தனது மகளின் போட்டோவை மீடியாக்களில் காட்டி விட்டார்.

ஒரு நாயகி உதயமாகிறாள்...
நார்த் வெஸ்ட் பிறப்பதற்கு முன்னரே தங்களது குழந்தையை டாக் ஷோ ஒன்றில் தான் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தார்கள் கிம்-கென்யே தம்பதிகள்.

டிமாண்ட் ஜாஸ்தி....
ஆனால், அதற்குள் ஒரு பத்திரிக்கை ரூ. 11.90 கோடி பணம் தருவதாகவும், கிம்முக்குப் பிறந்த மகளின் முதல் புகைப்படத்தை தங்களுக்கே தர வேண்டும் என்றும் கிம் கர்தஷியானுக்கும், அவரது காதலர் கென்யே வெஸ்ட்டுக்கும் கோரிக்கை விடுத்தது.

சமூக சேவை....
இதனால், அந்த நட்சத்திர தம்பதிகள் சிறிது சஞ்சலம் அடைந்ததாகவும், அப்படிக்கிடைக்கும் பணத்தை அவர்கள் சமூக தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன.

முக்காடிட்ட முகம்....
ஆனால், அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த கிம், பொது இடங்களுக்கு மகளை அழைத்து வரும் வேளைகளில் தலைய்யில் முக்காடிட்டே அழைத்து வந்தார்.

முன்பு சொன்னது போல....
இந்நிலையில், கிம் கர்தஷியானின் தாயார் கிறிஸ் ஜென்னர் நடத்தி வரும் டாக் ஷோவுக்கு திடீரென பிரபலம் அதிகரித்துள்ளது. காரணம், கிம்மின் குழந்தையையும் இந்த ஷோவில் காட்டியதுதான்.

கிறிஸ் ஷோ....
கிறிஸ் என்ற பெயரில் ஷோ நடத்தி வரும் ஜென்னர், தனது பேரக் குழந்தை மூலம் தனது நிகழ்ச்சிக்கு பிரபலம் தேடியுள்ளதாக பேச்சும் எழுந்துள்ளது.

கூடிய ரேட்டிக்....
தனக்கும் கிம்முக்கும் இடையே பிறந்த குழந்தை நார்த் வெஸ்ட்டின் புகைப்டபத்தைக் காட்டியடி தந்தை கென்யே வெஸ்ட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரேட்டிங் கூடி விட்டதாம்.

ரொம்ப ஸ்பெஷல் கெஸ்ட்....
ஆகஸ்ட் 23ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்த ஷோவின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தனது குழந்தையுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கென்யே வெஸ்ட்.

ஜாலியோ ஜிம்கானா....
தனக்கும் கிம்முக்கும் இடையிலான உறவு குறித்து அப்போது ஜாலியாக பேசினார் கென்யே. தன்னைப் பற்றியும், கிம் குறித்தும் வரும் விமர்சனங்களை தாங்கள் வரவேற்பதாகவும், விமர்சிக்கும் அளவுக்கு கிம் வளர்ந்துள்ளார் என்றும் சிரித்தபடி கூறினார் கென்யே.

டாப் 1 நிகழ்ச்சியானது....
இந்த நிகழ்ச்சியின்போது தனது குழந்தையின் புகைப்படத்தையும் காட்டினார் கென்யே வெஸ்ட். கிம் குழந்தையின் புகைப்படம் காட்டப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் மவுசு ஏற்பட்டு விட்டதாம். மேலும் லாஸ் ஏஞ்சலெஸ், டல்லாஸில் இந்த நிகழ்ச்சிதான் முதலிடத்தையும் பிடித்துள்ளதாம்.

விரைவில் திருமணம்....
குழந்தை பிறந்து கிட்டத்தட்ட மூன்று மாத காலங்கள் ஓடி விட்ட நிலையில், விரைவில் கிம்- கென்யே ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications