மாயமான நிலக்கரி கோப்புகள்.. சுப்ரீம் கோர்ட்டில் நாளைமறுநாள் விசாரணை!
Subscribe to Oneindia Tamil

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக ஆகஸ்ட் 25-ந் தேதி வரையிலான விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்தது. மொத்தம் 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி சீலிட்ட கவர்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய விசாரணையின் போது தமது விசாரணை அறிக்கை விவரங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞருடன் பகிர்ந்து கொள்வதற்கு சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. மேலும் சிபிஐக்கு கூடுதல் அதிகாரம் கோரும் மனுக்களும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மாயமான கோப்புகள் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications