தூத்துக்குடி: லாரி ஸ்டிரைக் வாபஸ்… துறைமுகப் பணிகள் விறுவிறுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதைத்தொடர்ந்து துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமாக தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளுக்கு காப்பர் கான்சன்ட்ரேட், நிலக்கரி, சல்பேட் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அந்நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடியில் 600க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் உட்பகுதியில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளுக்கு நடை ஒன்றிற்கு வாடகையை ரூ.700ல் இருந்து ரூ.1500ஆக அதிகரித்து தரவேண்டும் என்று வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் கடந்த 4தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அனைத்து லாரி உரிமையாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதாவது, கப்பல் வந்த 30தினங்களுக்குள் வாடகையை ஷிப்பிங் நிறுவனங்கள் வழங்கிடவேண்டும், துறைமுகத்தின் உள்ளே சன்டிங் அடிக்கும் லாரிகளுக்கு எடை வாடகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி&இறக்குமதி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
லாரி உரிமையாளர்களுடன் தனியார் தொழில் நிறுவனத்தினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் வாடகையை 30சதவீதம் உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications