தம்பி துப்பாக்கியை இப்படிப் பிடி... இப்ப டுமீல்னு சுடு பார்ப்போம்... ஆப்கன் திகில்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் சிறுவர்களுக்கு துப்பாக்கியைப் பிடித்து சுடுவதற்கான பயிற்சி அளிக்கும் ஒரு பரபரப்பு வீடியோ பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட போர்ப் பயிற்சி போல இந்த சிறார்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளிக்கிறார்கள் தலிபான்கள்.
சாதாரண துப்பாக்கி முதல் கனரக துப்பாக்கி வரை சிறார்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது பார்க்கவே படு திகிலாக இருக்கிறது.

புன்னகையுடன் ஒரு டுமீல்
இந்த வீடியோவில் பால் வடியும் முகம் கொண்ட ஒரு சிறுவன் சிரித்தபடி துப்பாக்கிப் பயிற்சி பெறுகிறான். அவனுக்கு ஒரு தலிபான் தீவிரவாதி, துப்பாக்கியைப் பிடிப்பது எப்படி, சுடுவது எப்படி என்று பயிற்சி தருகிறார்.

பிரசார வீடியோ
இது ஒரு பிரசார வீடியோவாகும். இதை அல் கொய்தா தீவிரவாதிகள் இணையதளத்தில் போட்டுள்ளனர்.

பெண்ணின் கையில் ராக்கெட்
அதேபோல ஒரு பெண் தனது கையில் ராக்கெட் மூலம் ஏவப்படும் கிரேனெடை வைத்திருக்கிறார். அதை ஒரு கார் மீது செலுத்தி வெடிக்க வைக்கிறார்.

5 வயதிலிருந்தே
5 வயதிலிருந்தே சிறார்களுக்கு இப்படி ஆயுதப் பயிற்சியை அளிக்கின்றனராம் தலிபான்கள்.

பாகிஸ்தான் எல்லையில்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வசிரிஸ்தானில்தான் இந்தப் பயிற்சி முகாம் உள்ளதாம்.

ஏ.கே. 47 துப்பாக்கியுடன் பயிற்சி
அதேபோல பள்ளிப் பருவத்தில் உள்ள பல சிறார்கள் வரிசையாக உட்கார்ந்தபடி ஏ.கே. 47 துப்பாக்கியை கையாளும் பயிற்சியில் ஈடுபடும் காட்சியும் இதில் வருகிறது. சுட்டபிறகு துப்பாக்கியின் விசை தாங்க முடியாமல் அவர்கள் பின்னோக்கி சிரித்தபடி சாய்கிறார்கள்.. பார்க்கவே படு பாவமாக இருக்கிறது.

பாதிப் பேர் தந்தையை இழந்தவர்கள்
இந்த சிறார்களில் பாதிப் பேரின் தந்தையர் ஏற்கனவே தலிபான் அமைப்பில் இடம் பெற்று மரணமடைந்தவர்களாம். தந்தை வழியில் இவர்களையும் தலிபான்கள், தீவிரவாதிகளாக்க பயிற்சி அளித்து வருகின்றனராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications