ஜெகன் சொத்து குவிப்பு வழக்கு- ஆந்திரா அமைச்சரிடம் சிபிஐ விசாரணை
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஆந்திரா பெருந் தொழில்கள் துறை அமைச்சர் கீதா ரெட்டியிடம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ஆந்திரா முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்துகுவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஜெகன் சிறையில் இருக்கிறார்.

தற்போது தெலுங்கானா விவகாரத்தில் கடந்த 4 நாட்களாக ஜெகன் சிறையில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் கீதா ரெட்டியிடம் ஜெகன் சொத்து குவிப்பு பற்றி விசாரணை நடத்தி இருக்கின்றனர். அனந்தபூர் மாவட்டம் லெபாக்சி அறிவுசார் பூங்காவுக்கான நில ஒதுக்கீடு பற்றி கீதா ரெட்டியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐயால் விசாரிக்கப்படுகிற 5வது அமைச்சர் கீதா ரெட்டி. கடந்த ஆண்டு ஜெகன் வழக்கில் 6 ஆந்திர அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் மூவர் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஒரு அமைச்சர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications