2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகள் சீரமைப்பு செலவை அரசே ஏற்க தயார் - மோடி

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன.
சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்த வேண்டுகோளை குஜராத் அரசு முதலில் நிராகரித்து விட்டது.
இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம், 'மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவை குஜராத் அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
மக்களையும், மக்களின் சொத்துகளையும் பாதுகாக்க தவறியதற்காக நீதிமன்றம் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநில அரசின் சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்த திட்டம் என்ன? என்பதை கோர்ட்டுக்கும், குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்' என கூறினார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து கூறிய அந்த கமிட்டியின் தலைவர் ஷகில் அகமத், 'அரசு என்ன திட்டத்தை அறிவிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக பொறுத்திருப்போம். ஆனால் எப்படியிருந்தாலும் இந்த முயற்சி, மோடி மீதான கறையைத் துடைத்துக் கொள்ளவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை,' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications