2012ல் அதிகம் கல்லா கட்டிய பிரபலங்கள்: மடோனாவுக்கு முதலிடம்
நியூயார்க்: கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் பாப் பாடகி மடோனா முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை தயாரித்துள்ளது. இதில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை இரண்டாவது இடத்திற்கு தள்ளி பாப் பாடகி மடோனா(55) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மடோனா கடந்த ஆண்டு எம்டிஎன்ஏ சுற்றுப்பயணத்தில் தான் கல்லா கட்டினார்.

ரூ.850 கோடி
மடோனா கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் மட்டும் ரூ.850 கோடி சம்பாதித்துள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் ரூ. 680 கோடி சம்பாதித்துள்ளார். அவரது லிங்கன் படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இ.எல். ஜேம்ஸ்
பாப் மொகல் சைமன் காவெல் மற்றும் 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே புத்தகத்தை எழுதிய இ.எல். ஜேம்ஸ் ஆகியோர் ரூ.646 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அவர்களுடன் அமெரிக்க ரேடியோ பிரபலமான ஹோவர்ட் ஸ்டெர்னும் 3வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

ஓப்ரா வின்ப்ரே
டிவி ஷோ பிரபலமான ஓப்ரா வின்ப்ரே ரூ.523.6 கோடி வருவாயுடன் 14வது இடத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications