For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சோனியாவின் பிளாக் பெர்ரி போன் 'மிஸ்ஸிங்'...!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிளாக் பெர்ரி போனை கடந்த 2 நாட்களாக காணவில்லையாம். ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள அந்த போன், சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது காணாமல் போய் விட்டதாம்.

அந்த போனில் பல முக்கியமான இமெயில்களும், எஸ்எம்எஸ் செய்திகளும், பிற தகவல்களும் அடங்கியுள்ளதாம்.

தற்போது அது ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடிக்க சைபர் குற்றத் தடுப்புப் போலீஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதில் எஸ்பிஜி அதிகாரிகளும் இறங்கியுள்ளனராம்.

Sonia's Blackberry untraceable for last 2 days

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ராகுல் காந்தியின் செல்போன் டெல்லி விமான நிலையத்தில் திருடு போனது. லண்டனிலிருந்து திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. இருப்பினும் 2 நாட்கள் கழித்து ஒரு லக்கேஜ் பரிசோதகரிடமிருந்து அந்த போன் மீட்கப்பட்டது. இப்போது மகனைப் போல தாயும் தனது போனைத் தொலைத்து விட்டு நிற்கிறார்.

English summary
UPA Chairperson and Congress President Sonia Gandhi has lost her cellphone. According to sources, the Blackberry phone is untraceable for last many hours which carries confidential mails and text messages and other data which can be misused. The phone is currently switched off and Cyber cell experts have been asked to assist SPG in locating the phone's whereabouts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X