சிரியா மீது யு.எஸ். போர் தொடுத்தால்.. நிலைகுலைந்து போய்விடும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரசாயன குண்டுகளை சிரியா அரசு பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்றது என்று புகார் சொல்கிறது அமெரிக்கா.

இந்த புகார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் சிரியாவுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா போர் முஸ்தீபு

அமெரிக்கா போர் முஸ்தீபு

தற்போது ஐ.நா. குழு ஆய்வு நடத்தி வந்தாலும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

ஈரான், ரஷியா எதிர்ப்பு

ஈரான், ரஷியா எதிர்ப்பு

ஆனால் சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ஈரானும் ரஷியாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான், ரஷியா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் கை கோர்க்கக் கூடும்.

இந்தியாவுக்கு பாதிப்பு

இந்தியாவுக்கு பாதிப்பு

சிரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை நாள்தோறும் சந்தித்து வருகிறது.

எத்தகைய விளைவுகள் ஏற்படும்?

எத்தகைய விளைவுகள் ஏற்படும்?

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை உயரும், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும்.

நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்

நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும், நிதிப்பற்றாக்குறையும் அதிகரிக்கும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை கூடும்

நடப்பு கணக்கு பற்றாக்குறை கூடும்

நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்; அத்துடன் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியச்சுமையும் அதிகரிக்கும்

அதிகரிக்கும் பணவீக்கம்

அதிகரிக்கும் பணவீக்கம்

மானியத்தை குறைக்க விலைகளை அதிகரித்தால் பணவீக்கம் அதிகரிக்கும். இப்படி பணவீக்கம் அதிகரித்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+