அழுகிப் போன ரூ. 6 கோடி ஆஸி. பட்டாணி.. அதிகாரிகள் பறிமுதல்- குடோனுக்கு சீல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.6கோடி மதிப்பிலான அழுகிய பட்டாணிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர்.
தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையிலுள்ள ஒரு குடோனில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பாதிப்பிற்குள்ளான மக்கள் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ்சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட குடோனில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அங்கு இருந்த 3500டன் பட்டாணியில் சுமார் 2500டன் பட்டாணி அழுகியிருந்தது தெரியவந்தது.
மேலும், விற்பனைக்காக மூடைகளில் அடைத்து வைத்திருந்த ஆயிரம் டன் பட்டாணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த பட்டாணிகள் சாப்பிட உகந்ததா என்பதை கண்டறிய அவற்றினை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச்சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் பட்டாணி இருந்த குடோனை சீல் வைத்தனர்.

ஆய்வின் முடிவினை தொடர்ந்தே இந்த பட்டாணியை பயன்படுத்தலாமா என்பது தெரியவரும், பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்தால் பட்டாணிகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியான இந்த பட்டாணியின் மதிப்பு 6 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications