பிளாக் மூலம் விபச்சாரம்.. பெய்ஜிங்கில் சீன அமெரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: பிளாக் நடத்துவதாக கூறி அதன் மூலம் விபச்சாரத்தை நடத்தி வந்த சீன அமெரிக்கர் உள்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் ஸூ சார்லஸ் பி சுவான். 60 வயதாகிறது இவருக்கு. பிரபலமான நபர். இவரது பிளாக்குக்கு 1.2 கோடி பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பெய்ஜிங் மாவட்டம் சாயோங் என்ற இடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
குரூப் செக்ஸ் விருந்துகளுக்கு இவர் ஏற்பாடு செய்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்ததாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இவருடன் சேர்த்துக் கைதானவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications