For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாசின் பட்கல் கைதுக்கு மத முத்திரை குத்துவதா? சமாஜ்வாடிக்கு பாஜக கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் கைது நடவடிக்கைக்கு மத முத்திரை குத்தி கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

யாசின் பட்கல் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான கமால் ஃபரூக்கி, குற்றத்தின் அடிப்படையில் பட்கல் கைது செய்யப்பட்டாரா? அல்லது மதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் இஸ்லாமியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவும் பட்கல் கைதை விமர்சித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக், சிறுபான்மையினர் வாக்குகளைக் கவருவதற்காக இப்படி தரம்தாழ்ந்து பேசுவதை சமாஜ்வாடி கட்சி நிறுத்த வேண்டும் என்றார்.

English summary
The BJP on Saturday criticised the Samajwadi Party (SP) for giving a religious hue to the issue of terrorism, after a party leader said Indian Mujahideen co-founder Yasin Bhatkal was targeted because he was a Muslim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X