புதிய ஆட்டோ கட்டண அட்டை இன்று முதல் விநியோகம்!
சென்னை: சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஆட்டோ கட்டண விவரங்கள் அடங்கிய அட்டை, இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் புதிய ஆட்டோ கட்டணங்களை முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார். இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய ஆட்டோ கட்டண விவர அட்டைகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 13 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், புதிய ஆட்டோ கட்டண விவர அட்டைகள் ஒரு வார காலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விவர அட்டையை ஆட்டோவில் ஒட்டி வைக்கவும், தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விவரத்தை தெரிவிக்கவும் வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதையும் மீறி கூடுதல் கட்டணம் பெறும் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து புகார் அளிக்க தெற்கு மண்டல பயணிகள் 044-24749002 என்ற எண்ணிலும், வடக்கு மண்டல பயணிகள் 044-24744445 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, 'ரசீது அளிக்கும் புதிய மீட்டர் இயந்திரத்தை விரைவில் அளிக்க வேண்டும்' என்று ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications