சென்னை மெட்ரோ ரயில்: செப்.முதல்வாரத்தில் சோதனை ஓட்டம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த வாரம் தொடங்கும் என மெட்ரோ ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்ணார பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரையும் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதையிலும், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலத்தின் மீதும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

2014 மார்ச் முதல் முதற் கட்டமாக
அடுத்த ஆண்டு(2014) மார்ச் மாதத்தில் கோயம்பேட்டில் இருந்து வடபழனி, கிண்டி வழியாக பரங்கிமலை வரை உயர்மட்ட பாலத்தின் மீது மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

ரயில் பாதைகள்
இதற்காக மெட்ரோ ரயிலை சோதனை ஓட்ட முறையாக இயக்கி பார்ப்பதற்காக கோயம்பேடு பணிமனையில் 800 மீட்டர் தண்டவாள பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மின் கம்பம், சிக்னல் அனைத்தும் அமைக்கப்பட்டுவிட்டது. பாதையை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

44 மெட்ரோ ரயில்கள்
பிரேசிலில் உள்ள நிறுவனம் ரயில்களை தயாரித்து வருகிறது. ஒரு ரெயில் பெட்டி ரூ. 9 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. மொத்தம் 44 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

பிரேசிலில் 9 ரயில்கள்
ஒவ்வொரு ரயிலிலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பிரேசிலில் இருந்து 9 ரயில்கள் வர வேண்டும். இதில் ஒரு ரயில் ஏற்கனவே வந்து விட்டது. மேலும் 8 புதிய ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் கப்பலில் சென்னை வருகிறது.

ஆந்திராவில் 132 பெட்டிகள்
மீதமுள்ள ரயில்களுக்காக 132 பெட்டிகள் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்படுகிறது.

சோதனை ஓட்டம்
அடுத்த வாரம் சோதனை ஓட்டம் நடக்கிறது. தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனையின் போது மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு வெள்ளோட்டம் விடப்படும்.












Click it and Unblock the Notifications