இடதுசாரிகளின் மாற்று அரசியல் இயக்கத்தில் அதிமுக இணைய பிரகாஷ் காரத் அழைப்பு!
சென்னை: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைக்கும் மாற்று அரசியல் அவசியம் என்றும் இதில் அதிமுக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இடதுசாரிகள் இயக்கங்கள் சார்பாக மாற்றுப் பாதைக்கான அகில இந்திய பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் சென்னை ஓட்டேரியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசுகையில்,

2009-இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் சேர்ந்து 48% வாக்குகள்தான் பெற்றன. எஞ்சிய 52% மக்கள் காங்கிரஸ், பாஜகவை ஆதரிக்கவில்லை என்பது தெரிகிறது.
இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்றம் வர வேண்டும் என விரும்பும் மக்களையும், அந்த மக்களைத் தலைமை தாங்கும் இயக்கங்களையும் அணி திரட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இந்தத் அணி திரட்டல் மூலம் ஓர் அரசியல் மாற்றை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். மாற்றுக் கொள்கை எனும் எங்கள் இலக்கை நோக்கி காங்கிரஸ், பாஜக அல்லாத பல்வேறு கட்சிகள் வரவேண்டும் என்று இடதுசாரிகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.
காங்கிரஸ் - பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து மாற்று அரசியல் காணுவோம். இந்த மாற்று அரசியலில் அதிமுகவும் இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications