கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா? மத்திய அரசு பச்சைத் துரோகம்.. தா. பாண்டியன் சீற்றம்!!

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கோரி வருவதுடன் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவும், தமிழ்நாடு அரசும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்பொது விசாரனை நடைபெற்று வருகின்றது.
மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கச்சத் தீவு கேட்பார் அற்று கிடந்தது என்றும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அதன் காரணமாக இலங்கை நாட்டிற்கு கச்சத் தீவு சொந்தமாகி விட்டது என்றும் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்க்குரியதாகும்.
இலங்கைக்கு கச்சத்தீவு சொந்தமென்றால், இருநாடுகளும் 1974-ல் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
தமிழக மீனவர்கள் நித்தம் நித்தம், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், மீன்களை பறிமுதல் செய்வதும், படகுகளை உடைப்பதும், பறிமுதல் செய்து எடுத்துச் செல்வதும் மீனவர்களை கைது செய்து சிறையில், அடைப்பதும், சுட்டுக்கொல்வது போன்ற வன்முறைகளை மேற்கொண்டுவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்து, தமிழக மீனவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்திட்ட மத்திய அரசின் நயவஞ்சக செயலை வண்மையாக கண்டிப்பதுடன், கச்சத் தீவை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழக அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்க முன்வர வேண்டுகிறோம்.
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு போராடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதுடன் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications