பிரபாகரன் அடம் பிடித்ததால்தான் தனி ஈழத்தைப் பிரிக்கவில்லை ராஜீவ்.. இளங்கோவன்

ஈரோ்டில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படிப் பேசினார் ஈவிகேஎஸ்.
அவர் கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது.
மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தருவதுதான் அரசின் தலையாய கடமை. இதற்காகதான் மத்திய காங்கிரஸ் அரசு 87 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது.
ஆனால் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததால்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாக எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஊழலை பற்றி யார் பேசினாலும் அதற்கு தகுதி வேண்டும்.
இப்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விரைவில் சாசெய்யப்படும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக தலைவர் கூட்டணி பற்றி பேசுவார். காங்கிரஸ் தயவை நாடுவார். வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி இல்லை என்பார். கூட்டணியில் இருந்தபோதிலும் காங்கிரசை கருணாநிதி விமர்சித்தார். காரணம் காங்கிரசில் தட்டிக்கேட்க ஆளில்லை என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications