உங்க அலம்பல் தாங்கலையே... ‘டார்ச்சர்’ கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்

Subscribe to Oneindia Tamil

ஷாங்காய்: சீனப்பெண் ஒருவர் தன்னையும், தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று, சடலத்தை மறைப்பதற்காக, அதைக் குக்கரில் சமைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப் பிறாகு வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கவில்லையாம்.

முதலில் நல்லவராக இருந்த அப்பெண்ணின் கணவர், நாளடைவில் அப்பெண்ணையும், அவரது மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண், கோபத்தில் பொங்கியெழுந்து விட்டார்.

போதை மருந்து கொடுத்து கணவரை மயக்கத்திற்கு கொண்டு சென்ற மனைவி, தொடர்ந்து 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அவரை பட்டினி போட்டுள்ளார். வஞ்சம் தீர்க்கும் விதமாக கணவரை அடித்தும் சித்ரவதை செய்துள்ளார்.

தொடர் கொடுமைகளை தாங்க முடியாத கணவர் மரணமடைந்து விட போலீசில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்க நினைத்துள்ளார் அப்பெண். அதனைத் தொடர்ந்து கணவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்துள்ளார்.

வீட்டில் இருந்து கிளம்பிய துர்நாற்றத்தையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+