மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு செல்லும் காங்கிரஸ் தலைவர் சோனியா

Subscribe to Oneindia Tamil

Congress president Sonia Gandhi to fly to the US for medical check-up
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதமும் அமெரிக்காவுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி அவர் லோக்சபாவில் அமர்ந்திருக்கையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 மணி நேரம் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினார்.

சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று மாலை அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டதற்கு, ஆமாம் அவர் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவிருக்கிறார் என்றார். ஆனால் இது தொடர்பாக மேலும் விபரம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+