கார் லோன் வேணுமா?: ரூ.50,000 சம்பளம் இருக்கணும் என்கிறது ஸ்டேட் வங்கி!
மும்பை: ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார்லோன் வாங்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. கார் கடன் பெறுவதற்கான நிதித் தகுதியை திடீரென உயர்த்தியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.
பொருளாதார மந்தநிலை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பராமறிப்பு ஆகியவற்றின் செலவு அதிகரித்து வருவதால் இனி கார் லோன் வாங்க குறைந்த பட்சம் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

பணவீக்கம்
பணவீக்கம் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இருப்பினும் பொருளாதார சீர்குலைவை மனதில் கொண்டே இந்த நடவடிக்கையில் ஸ்டேட் பாங்க் இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாதம் ரூ.50000
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பெட்ரோல் விலை, கார்ப் பராமரிப்பு, இன்சூரன்ஸ், மற்றும் பிற செலவுகளை மனதில் கொண்டு, ஒரு குடும்பமானது தான் வாங்கும் காரை பராமரிக்க மாதத்திற்கு ரூ. 50,000 செலவிட நேரிடும் என்று நாங்கள் கணக்கிடுகிறோம். இதை மனதில் கொண்டே கார்க் கடன் பெறுவதற்கான தகுதியை உயர்த்தியுள்ளோம் என்றார்.

பிராசசிங் கட்டணம்
மேலும் கார்க் கடன் வழங்கும்போது காரின் விலையில் 0.51 சதவீதத்தை பிரசாசிங் கட்டணமாகவும் வசூலிக்கப் போகிறதாம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

ஊதிய குறைப்பு
பொருளாதாரம் நலிவடையும்போது இதுபோல கார்க் கடன் வழங்கும்போது சில தகுதிகளை உயர்த்துவது வாடிக்கைதான் என்று வங்கிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. பொருளாதார சீர்குலைவின்போது ஊதியக் குறைப்பு, ஊதிய உயர்வு தாமதம் உள்ளிட்டவை இடம் பெறும் என்பதால் அதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது என்பது வங்கிகளின் வாதமாகும்.

அடக்கி வாசிங்க
மேலும் அனைத்து வங்கிக் கிளைகளும் ரூ. 1 கோடி அளவுக்கு மேல் கார்க் கடன் வழங்காமல் அடக்கி வாசிக்குமாறும் அனைத்துக் கிளைகளுக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளதாம். மேலும் விலை அதிகமான கார்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்துமாறும் அது கூறியுள்ளதாம்.

குறைந்த வட்டியில்
ஒரு கார் வாங்குவதற்கு அதிகபட்சம் 85 சதவீதம் வரை தற்போது கடன்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாதான் குறைந்த வட்டியில் கார் கடன்வழங்குகிறது. அதாவது 10.45 சதவீத வட்டியில் அது தருகிறது.

ரூ.19,040 கோடி
ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ. 26,411 கோடி அளவுக்கு கார்க் கடன்களை ஸ்டேட் பாங்க் வழங்கியுள்ளது. இது 2012 ஜூன்மாதத்தில் ரூ. 19,040 கோடியாக இருந்தது. வீட்டுக் கடன்களுக்கு அடுத்தபடியாக கார் கடன்களைத்தான் வங்கிகள் அதிகம் வழங்குகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications