அதிமுகவில் அனிதா குப்புசாமி... ஜெ. முன்னிலையில் இணைந்தார்
சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
தற்போது ஜெயா டிவியில் சமையல் தொடர்பான நிகழ்ச்சியி்ல அனிதா குப்புசாமி பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தி பேசும் தமிழ்க் குயில்
அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.

தமிழகத்து குப்புசாமியின் மனம் கவர்ந்து...
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.

கர்நாடக இசையில் வல்லுநர்
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பால்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர்.

கணவருடன் இணைந்து
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

பல்வேறு டிவிகளில்
சன் டிவியின் மலரும் மொட்டும் நிகழ்ச்சியை முன்பு அழகாக தொகுத்து அளித்து வந்தார் அனிதா குப்புசாமி. பின்னர் மக்கள் டிவியில் மக்களிசைப் பாடல்களை கணவருடன் இணைந்து பாடி வந்தார். அதேபோல அனிதாவின் சமையல், யூத் சிங்கர், உன் வாசம் என் நேசம் என பல நிகழ்ச்சிகளில் நடத்தியுள்ளார்.

அதிமுகவில் இணைந்தார்
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

பாமக தீரனும்
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். மு்ன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்தார்.

பட்டுராஜனும் வந்தார்
மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் இன்று அதிமுகவில் இணைந்தார். இவர் முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவி்ல்தான் இருந்தார். பின்னர் திமுகவுக்குப் போனார். தற்போது மீண்டும் அதிமுகவுக்கேத் திரும்பியுள்ளார்.

ஜெயா டிவி செய்தி வாசிப்பாளரும்
ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன் தனது மனைவி, மகனுடன் குடும்பமாக அதிமுகவில் ஐக்கியமானார்.
-
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி












Click it and Unblock the Notifications