கூகுள் இணை நிறுவனரின் காதலி வேற வேலைக்கு மாற்றப்பட்டாரா?

Subscribe to Oneindia Tamil

சிலிக்கான் வேலி: கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

செர்ஜியின் மனைவியின் தூண்டுதலின் பேரில் செர்ஜியின் காதலியான அமன்டா ரோசன்பர்க் தற்போது பார்த்து வரும் கூகுள் பணியிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெலியாகியுள்ளது.

ஆனால் அப்படியெல்லாம் அமன்டா மாற்றப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் விளக்கியுள்ளது.

ரகசியமாய்... ரகசியமாய்..

ரகசியமாய்... ரகசியமாய்..

அலுவலகத்தில் வைத்தே செர்ஜியும், அமன்டாவும் ரொமான்ஸில் ஈடுபட்டதால் செர்ஜியின் மனைவி கொந்தளித்து விட்டார். கணவரை விட்டு அவர் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..

முன்பு செர்ஜியின் நேரடி மேற்பார்வையில் அவர் பணியாற்றி வந்தார். தற்போது அந்தப் பணியிலிருந்து தூக்கப்பட்டு வேறு ஒரு வேலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பார்வையின் மறுபக்கத்தில்...

பார்வையின் மறுபக்கத்தில்...

இதுகுறித்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள்பிளக்ஸ் அலுவலக வட்டாரத் தகவல்கள் கூறுகையில், தற்போது செர்ஜியின் நேரடி மேற்பார்வையிலான பணியில் அமன்டா இல்லை. வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

வெடித்து வெளியான காதல்

வெடித்து வெளியான காதல்

27 வயதான அமன்டாவுக்கும், செர்ஜிக்கும் இடையிலான ரகசியக் காதல் சமீபத்தில்தான் பகிரங்கமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

எங்கிருந்தாரோ.. அங்கேயே...

எங்கிருந்தாரோ.. அங்கேயே...

ஆனால் அமன்டாவின் பணியிடம் மாற்றப்படவில்லை என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,அமன்டா வேறு எந்தப் பணிக்கும் மாற்றப்படவில்லை. முன்பு எந்தப் பணியில் இருந்தாரோ அதே பணியில்தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

கூகுள் கிளாஸ்...

கூகுள் கிளாஸ்...

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் அமன்டா. சில மாதங்களுக்கு முன்புதான் அவர் கூகுள் கிளாஸ் பிரிவில், மார்க்கெட்டிங் மேனேஜராக பணியில் அமர்ந்தார். கூகுள் கிளாஸ், செர்ஜியின் கனவுத் திட்டமாகும். அதன் பிறகுதான் செர்ஜிக்கும், அமன்டாவுக்கும் இடையே உறவு ஏற்பட்டதாம்.

குறுக்கே வந்த அமன்டா...

குறுக்கே வந்த அமன்டா...

செர்ஜிக்கும், அவரது மனைவி வோஜ்சிக்கி-க்கும் இடையே எந்தப் பிளவும் ஏற்படாமல் நெருக்கமாக இருந்த நிலையில்தான் அமன்டா குறுக்கிட்டதாக கூறுகிறார்கள். அமன்டாவுடன் செர்ஜி நெருக்கமாக பழகி வருவதை அறிந்து செர்ஜியின் மனைவி அப்செட்டாகி விட்டாராம்.

பிரிந்தன மனங்கள்

பிரிந்தன மனங்கள்

நான்கு மாதங்களுக்கு முன்பு செர்ஜியும், வோஜ்சிக்கியும் பிரிந்து விட்டனர். ஆனால் இவர்களின் பிரிவுக்கு அமன்டா மட்டும் காரணம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னாடியே இன்னொரு காதல்

முன்னாடியே இன்னொரு காதல்

செர்ஜி தவிர கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹியூகோ பாரா என்பவருடனும் நெருங்கிப் பழகி வந்தவர் அமன்டா. ஆனால் பாரா தற்போது வேலையை விட்டுப் போய் விட்டார். சீன செல்போன் நிறுவனமான சியாமியில் அவர் தற்போது பணியாற்றி வருகிறார்.

அட போம்மா...

அட போம்மா...

செர்ஜியுடன், அமன்டா பழக ஆரம்பித்ததால் கடுப்பாகி அவர் வேலையை விட்டுப் போய் விட்டதாக கூறுகிறார்கள்.

விவாகரத்து இல்லை...

விவாகரத்து இல்லை...

இதுவரை செர்ஜியும், அவரது மனைவியும் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கவில்லை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஏற்கனவே சில தொண்டு நிறுவனப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போதும் அதைத் தொடருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+