நவி பிள்ளையின் குற்றச்சாட்டு பாரபட்சமானது.. சொல்கிறது இலங்கை
லண்டன்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களும், அறிக்கையும் பாரபட்சமானது, ஒரு தலைபட்சமானது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆய்வு நடத்தும் முன்பே நவநீதம்பிள்ளை இலங்கை மீது குற்றம் சாட்டும் மனப்பாண்மையோடு வந்துள்ளார். ஐ.நா. குழுவினர் இலங்கை குறித்து அண்மையில் அளித்த அறிக்கையின் உண்மையை ஆராயாமல், அதற்கு எதிராக ஒரு அறிக்கையை அவர் சமர்பித்துள்ளார்.
போரில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்த முயன்றதில் இருந்து அவரின் சார்பு நிலை தெரிய வந்துள்ளது.

இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக சாட்டும் அவர், அதுகுறித்து ஆதாரங்களை சமர்பிக்காதது ஏன்.
நவி பிள்ளையின் அறிக்கை நியாயமற்றது, தவறானது, பாரபட்சமானது. நாங்கள் அவரை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு வந்து நேரில் பார்வையிடுமாறு அழைத்திருந்தோம். இதிலிருந்தே நாங்கள் எதையும் மறைக்க விரும்பவில்லை என்பதை அறியலாம்.
ஆனால் அப்படி இருந்தும், எங்களது செயல்பாடுகள் தெளிவாக இருந்தும் கூட ஒருதலைபட்சமாக குற்றம் சாட்டியுள்ளார் பிள்ளை. அவரது அறிக்கையில் நேர்மை இல்லை, சமச்சீர் இல்லை என்றார் பெரீஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications