இவரு கண்ண உருட்டுனா... சந்திரமுகி ஜோதிகா தோத்தாங்கப்பா
லிவர்பூல்: இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஜான் டோயில் பார்க்க பரம சாதுவாக, பன் ரொட்டி போலத்தான் இருக்கிறார். ஆனால் அவர் கண்களை உருட்ட ஆரம்பித்து விட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார்.
எப்படி நம்ம ஊர் சிம்புவுக்கு விரல் வித்தையோ அதேபோல இந்த டோயிலுக்கு கண் வித்தை சாலப் பொருத்தமாக இருக்கிறது.
யூடியூபில் இவர் கண்களால் காட்டும் வித்தை குறித்த வீடியோதான் இப்போது பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

உலக சாதனை ஆசை...
உலக சாதனை புரியும் நோக்கில் இந்த கண் உருட்டல் வித்தையில் படு தீவிரமாக இறங்கியுள்ளார் டோயில்.

கண் வித்தகர்....
டோயிலின் இந்த கண் விளையாட்டுக்கு பல லட்சம் விசிறிகள் உள்ளனராம். இவரது வீடியோக்கள் இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு யூடியூப் நிரம்பி வழிகிறது.

ஜோதிகாவே தோத்துருவாங்க....
சந்திரமுகி ஜோதிகா போல இவர் கண்களை உருட்டியும், பிதுக்கியும், விழித்தும், கிட்டத்தட்ட வெளியில் வந்து விழுவது போலவும் செய்யும்போது பார்க்கவே மயிர்க்கூச்செறிகிறது.

5 லட்சம் பார்வையாளர்கள்....
இவரது வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அமெரிக்காவில் இவர் ஒரு டிவி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அடுத்து ஜப்பானுக்கும் தனது உருட்டல் விளையாட்டைக் கொண்டு செல்லவுள்ளாராம்.

விளையாட்டாக ஆரம்பித்தது....
30 வயதாகும் டோயில் திருமணமானவர். ஒரு குழந்தையும் உள்ளது. இவரது வீட்டுக்கு அருகே உள்ள கோச் அன்ட் ஹார்ஸஸ் பப்புக்கு அடிக்கடி போவார். அங்குதான் முதலில் இந்த விளையாட்டை சாதாரணமாக செய்தார். அங்கு ரசிகர்கள் கூடவே சீரியஸாக இதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டாராம்.

இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை....
தனது கண் உருட்டல் விளையாட்டு உலக சாதனை என்று இவரே கூறி வருகிறார். ஆனால் இதுவரை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இதை அங்கீகரிக்கவில்லை. காரணம், உரிய சாட்சிகளின்றி இவர் செய்வதாலாம்.

ஜப்பான்ல பாருங்கப்பா....
இருப்பினும் ஜப்பான் பயணத்தின்போது தனது சாதனை உலகம் முழுவதும் அறியும் வகையில் எடுபடும் என்ற நம்பிக்கையுடன் கண்களை உருட்டிக் கூறுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications