ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு
டோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இஷு தீவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
பசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை . நிலநடுக்கத்தின் எதிரொலியாக புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயிர்ப்பலி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும், சேதாரத்தின் அளவுகள் இதுவரை தெரிய வரவில்லை.
அதேபோல், நேற்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியாப் தீவுகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவான போதும், அங்கும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.












Click it and Unblock the Notifications