கோவா கத்தோலிக்கர்கள் கலாசார அடிப்படையில் ஹிந்துக்களே: முதல்வர் மனோகர் பாரிக்கர்
பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலாசார அடிப்படையில் ஹிந்துக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்திய ப்ளாக் வெளியிட்டிருக்கும் மனோகர் பார்க்கர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

கோவா கத்தோலிக்கர்களும் ஹிந்துக்களே
இந்தியா கலாசார ரீதியாக ஹிந்து நாடு. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களும் கூட கலாசார அடிப்படையில் ஹிந்துக்களே. ஏனெனில் அவர்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறையானது பிரேசிலில் இருப்பது போல இல்லை.
கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறையும் கூட ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை ஒத்ததாகவே இருக்கிறது. நான் ஒரு ஹிந்து என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பு இல்லை.

நான் ஹிந்து தேசியவாதி அல்ல
சில ஊடகங்கள் கூறுவதைப் போல நான் ஒரு ஹிந்து தேசியவாதியும் அல்ல. ஹிந்துக்களைப் பொறுத்தவரையில் எவர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த மாட்டார்கள். தங்களைத் தாங்களே பாதுகாக்க மட்டுமே செய்வார்கள் என்பதே வரலாறு.

மோடியை விட சிறப்பாக செயல்பட்டிருப்பேன்
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு வன்முறைகள் நிகழ்ந்திருக்கக் கூடாது. எந்த ஒரு வன்முறையாலும் அரசு நிர்வாகம் சீர்குலைந்துவிடக் கூடாது. நான் அந்த இடத்தில் இருந்தால் நரேந்திர மோடியைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பேன். ஏனெனில் அப்போது குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்த நரேந்திர மோடி, அந்த பதவிக்கு புதியவர்.

மோடிக்குத்தான் தொடர்பு இல்லையே...
நரேந்திர மோடியின் அரசியல் பாதையில் ஒரு கரும் புள்ளியாக குஜராத் வன்முறை இருந்தாலும் அவருக்கு அதில் எந்த ஒரு பங்கும் இல்லை. அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட்டிருப்பார். ஆனால் விசாரணை அமைப்புகள் அனைத்தும் அவருக்கு தொடர்பு இல்லை என்றே தெரிவித்துவிட்டன.
குஜராத்தில் என்ன நடந்திருந்தாலும் அது துரதிருஷ்டவசமானது. அதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்பது அல்ல என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications