For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2017 வரை குஜராத் மக்களுக்கு சேவையாற்றுவேன்: மோடி திடீர் பேச்சு

By Mathi
Google Oneindia Tamil News

Modi says serving Gujarat is his priority till 2017
காந்திநகர்: குஜராத் மக்களுக்காக 2017ம் ஆண்டு வரை சேவையாற்றுவேன் என்று முதல்வர் நரேந்திர மோடி பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் நரேந்திர மோடி உரையாறினார். அப்போது மாணவர் ஒருவர் நரேந்திர மோடியிடம், நீங்கள் அடுத்த ஆண்டு நாட்டின் பிரதமராகிவிட்ட பின்னரும் கூட அடுத்த ஆண்டு ஆசிரியர் தினத்தில் இதேபோல் எங்களுடன் பேச வருவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நரேந்திர மோடி, உங்களுக்காக 2017ம் ஆண்டு வரை சேவையாற்றுவேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். நான் பிரதமராவது பற்றி கனவு கண்டது இல்லை. ஒருவர் கனவு கண்டால் அதற்காக எதையாவது செய்து கொண்டிருக்கிற வேண்டும். அப்படி செய்யாமல் கனவு காணக் கூடாது என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று கருதப்பட்டு வரும் நிலையில் மோடியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Gujarat Chief Minister Narendra Modi has said that his priority is the people of his state who have elected him till 2017. When asked about Prime Ministerial ambitions by a student during a Teachers' Day function, he said he has no intentions of becoming anything, but he just wants to serve the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X