கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார் ஆஸ்டின்

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் தேமுதிகவில் மாநில துணைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். 2009-ல் லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். 2011-ல் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டும் தோற்றார். தேமுதிகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சிட்க் பணிகள் எதிலும் ஈடுபடாமல் விலகி இருந்து வந்த ஆஸ்டின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வில் சேர வலியுறுத்தினர். இதையடுத்து வரும் 6 ஆம் தேதி சென்னையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்டின், ''வரும் 6ஆம் தேதி, சென்னையிலுள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து தலைவர் கருணாநிதி முன்னிலையில் எனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைய இருக்கிறேன். மேலும், விரைவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் வரவிருக்கிறார். அப்போது பல்லாயிரக்கணக்கானவர்களுடன் தி.மு.க.வில் இணையும் விழாவை பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் அக்கட்சியில் இருந்தார் ஆஸ்டின். அவரது நெருங்கிய நண்பர் திருநாவுக்கரசர் அவர் வழியில் காங்கிரசில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்டின் திமுகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications