பிரேமலதா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!
Subscribe to Oneindia Tamil

கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரேமலதா, மக்களிடம் இருந்து ரத்தத்தை உரிஞ்சுவது போல் வசூல் செய்யும் வரிப்பணத்தை தமிழக அரசு வீண் ஆடம்பரங்களுக்கு செலவு செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், பிரேமலதாவின் இந்த பேச்சு தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications