For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியர் தினத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் டிஸ்மிஸ்!!: ஜெ. அதிரடி!!

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalithaa sacks Tamil Nadu minister Vaigai Selvan
சென்னை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசின் தலைமை கொறடாவாக இருந்த அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ வைகைச் செல்வனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்திருந்தார்.

ஆனால் ஏராளமான புகார்கள் வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வைகைச் செல்வனை முதல்வர் ஜெயலலிதா எச்சரித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் அடிப்படையில் வைகைச் செல்வனை பதவி நீக்கம் செய்திருக்கிறார் ஆளுநர்.

இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், வைகைச் செல்வன் வசம் இருந்த பள்ளிக் கல்வித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் செயலர் பொறுப்பில் இருந்தும் வைகைச் செல்வன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தன்று அவரை முதல்வர் ஜெயலலிதா நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a sudden move, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday sacked one of her minister Vaigai Selvan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X