செப்டம்பர் 16 முதல்' ஹிந்து'வின் தமிழ் நாளிதழ்!
சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது.
மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு.
ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.

செப்டம்பர் 16ம் தேதி முதல்
செப்டம்பர் 16ம் தேதி தனது தமிழ்ப் பதிப்பைவெளியிடுகிறது ஹிந்து.

என்ன பெயரோ...
இந்தத் தமிழ்ப் பதிப்புக்கு காமதேனு என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஒருபேச்சு உலவுகிறது. ஆனால் இந்தப்பெயர் மக்களிடம் எடுபடாது என்று இன்னொரு பேச்சும் அடிபடுவதால் அதிகாரப்பூர்வமாக தனது பெயரை இன்னும் அறிவிக்காமல்உள்ளது ஹிந்து.

உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில்...
புதன்கிழமையன்று ஹிந்துவில் இந்தப் பத்திரிக்கை குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில், உலகம் உயிர்பெறும் உங்கள் மொழியில் என்று இடம் பெற்றுள்ளது.

தமிழிலும் ஹிந்துவே...
பத்திரிக்கையின் பெயர்குறித்து கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவன தலைமை அதிகாரி அருண் ஆனந்த் கூறுகையில் ஹிந்து என்ற பெயரே தமிழ்ப் பதிப்புக்கும் சூட்டப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் ஒரு பெயரையும் பரிசீலித்து வருகிறோம் என்றார்.

கடும் போட்டி காத்திருக்கிறது
ஹிந்துவின் தமிழ் வரவுக்கு தமிழ்ப்பத்திரிக்கை உலகில் நிச்சயம் கடும் போட்டி காத்திருக்கிறது என்பதில் ஐயமிலல்லை. ஏற்கனவே தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற ஜாம்பவான்கள் களத்தில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளனர். இவர்கள் தவிர தினமணி போன்ற வேறு பல பத்திரிக்கைகளும் உள்ளன. இவர்களுடன் போட்டி போடுவது மலையுடன் மோதுவது போல.

எடிட்டர் அசோகன்
தமிழ் ஹிந்துவின் எடிட்டராக கே.அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆனந்த விகடன் எடிட்டராக இருந்தவர்.

தினகரன் என்ன செய்யும்..
தமிழ் ஹிந்துவின் வரவை சமாளிக்க தினகரன் என்ன மாதிரியான உத்திகளைக் கையாளும் என்று அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பாபி கூறுகையில், ஆறு மாதம் பார்த்த பிறகுதான் எங்களது உத்திகளைத் திட்டமிடுவோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications