செவ்வாயில் பூமியை விட அதிக பாஸ்பேட் தாது!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில், பூமியை விட அதிக அளவில் பாஸ்பேட் தாது இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உயிரினங்கள் வாழ தேவையான முக்கியமான தாதுவில் பாஸ்பேட்டும் ஒன்று என்பதால், பூமியைப் போலவே செவ்வாயிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற வாதத்திற்கு இது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
எப்படி ஆரம்ப காலத்தில் பூமி இருந்ததோ அதேபோலத்தான் செவ்வாய் கிரகமும் இருப்பதாகவும் வி்ஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாயில் அதிக தாதுக்கள்....
நிவேதா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. கிட்டத்தட்ட பூமியைப் போலவே இங்கும் தாதுக்கள் அதிகம். அதிலும் பூமியை விட இங்கு எளிதாக கரையும் நிலையில் இவை உள்ளன.

பாஸ்பேட் தாது...
இவற்றில் பாஸ்பேட் செரிந்து காணப்படுகிறது. உயிரினங்கள் வாழ பாஸ்பேட் தாது முக்கியமானது.

செவ்வாயில் உயிரினம்....
பாஸ்பேட் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் தோன்றியிருக்க முடியாது என்பது வி்ஞ்ஞானிகளின் வாதமாகும். எனவே செவ்வாயிலும் ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

விண்கற்கள் மூலம் பூமிக்கு வந்த பாஸ்பேட்....
ஒரு வேளை பூமியில் ஆரம்பத்தில் பாஸ்பேட் இல்லாமல் போயிருந்தால் எப்படி உயிரினம் தோன்றியிருக்கும் என்றும் ஒரு கேள்வி எழுந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் செவ்வாய் கிரகம் போன்ற பிற கிரகங்களிலிருந்து விண்கற்கள் மூலம் பூமிக்கு பாஸ்பேட் வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

அதிக அளவு பாஸ்பேட்....
உண்மையில் பூமியை விட அதிக அளவிலான பாஸ்பேட் செவ்வாயில் உள்ளதாம். எனவே அங்கிருந்து பெருமளவிலான பாஸ்பேட் பூமிக்கு வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

45 சதவீதம் அதிகம்...
செவ்வாயில் உள்ள பாறைகளிலிருந்து, பூமியில் உள்ள பாறைகளிலிருந்து வெளியாவதை விட 45 சதவீதம் அதிகமான பாஸ்பேட் வெளியாகிறதாம்.

உயிரினங்கள் வாழலாம்...
இத்தகைய கண்டுபிடிப்புகள் மூலம் நிச்சயம் செவ்வாய் கிரகம் உயிரினங்களுக்கேற்ற ஒன்றுதான் என்ற வாதம் மேலும் வலுப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications