யாருமே கண்டுக்காத குட்டித் தீவு இங்கிலாந்து: ரஷ்யா நக்கல்ஸ்

Subscribe to Oneindia Tamil

Britain a 'small island nobody cares about': Russia
லண்டன்: இங்கிலாந்து என்பது யாரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய தீவு என்று ஜி20 மாநாட்டில் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க்கில் ஜி20 மாநாடு நேற்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் ரஷ்ய பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர், இங்கிலாந்து யாரும் கவனிக்காத ஒரு சிறிய தீவு ஆகும் என்று கூறியதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் அதை மறுத்து அவர் இன்று காலை கூறுகையில்,

நான் இங்கிலாந்தை பற்றி அவ்வாறு கூறவே இல்லை. இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடையே நல்ல உறவு உள்ளது என்றார்.

ரஷ்யாவின் கருத்தை கேட்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பொங்கிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

இங்கிலாந்து வேண்டுமானால் சிறிய தீவாக இருக்கலாம். ஆனால் அது தான் ஐரோப்பாவை பாசிச கொள்கைகளில் இருந்து காத்தது, அடிமைத்தனத்தை அழித்தது, புதியவற்றை கண்டுபிடித்தது. இது போன்று வேறு எந்த நாட்டுக்கும் பெருமையான வரலாறோ, பெரிய மனதோ இல்லை. கலை, விளையாடு, இசை, தத்துவம் போன்றவற்றில் உலகிலேய இங்கிலாந்து தான் முன்னிலையில் உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+