நான் தான் கிரோபோ...: விண்வெளியில் பேசிய முதல் மனித உருவ ரோபோட்
டோக்கியோ: விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்துள்ளது.
ஜப்பான் உருவாக்கிய ரோபோட் இது. இந்த ரோபோட் தற்போது தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதுதான் விண்வெளியில் ஒலித்த முதல் ரோபோட் குரலாகும்.

வணக்கம் நண்பர்களே....
அகன்ற கண்களுடன் பெரிய சைசிலான கண்களைக் கொண்டது கிரோபோ ரோபோட். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி இந்த ரோபோட், பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு வணக்கம் என்று தனது முதல் பேச்சில் தெரிவித்தது.

ஆம்ஸ்டிராங்க்கு அஞ்சலி....
மேலும் நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும் அது அஞ்சலி செலுத்தியது.

பிரகாசமான எதிர்காலம்....
கிரோபோவின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் அது கூறுகையில், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஒரு ரோபோட், புதிய பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தனது காலடியை எடுத்து வைத்தது என்று தன்னைப் பற்றியும் கூறியுள்ளது.

நான் தான் கிராபோ...
ஜப்பான் மொழியில் அது முதலில் பேசத் தொடங்கியபோது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங் . நான்தான் கிரோபோ. நான்தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று ஆரம்பித்தது.

ஒரு கிலோ எடை....
இந்த ரோபோட்டின் உயரம் 34 சென்டிமீட்டராகும். எடை வெறும் ஒரு கிலோதான். இது கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி இது பூமியை விட்டுக் கிளம்பியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications