சிறைத்துறை நிகழ்ச்சியில் கைதிகளுடன் நடனமாடுகிறார் சஞ்சய் தத்!
புனே: சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சய் தத் கைதிகளுடன் சேர்ந்து நடனமாடுகிறார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது எஞ்சிய மூன்றரை ஆண்டு கால தண்டனையை அனுபவிக்க புனே எரவாடா ஜெயிலில் கடந்த மே மாதம் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வரும் அவர், ஜெயிலுக்கு வெளியே நடைபெறும் கலை நிகழ்ச்சியில் சக கைதிகளுடன் சேர்ந்து நடனமாடி அசத்த உள்ளார். இந்த கலைநிகழ்ச்சிக்கு சிறைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சி புனே லேண்ட்மார்க் பல்கந்தர்வா கலையரங்கத்தில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. முதல்வர் பிரிதிவிராஜ் சௌஹான், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் பல்வேறு நடிகர், நடிகைகளும் பார்வையாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த கோலாச்கலமிக்க நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சய் தத் நடனமாடுவதற்கு ஒப்பு கொண்டு உள்ளார்.
இது குறித்து புனே சிறைக் கண்காணிப்பாளர் யோகேஷ் தேசாய் கூறுகையில், "சிறைத்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காக நிதி திரட்ட இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறோம். 2 மணி நேரம் கலைநிகழ்ச்சி நடைபெறும். இந்தி மற்றும் மராத்தி சினிமா பாடல்களுக்கு சஞ்சய் தத் உள்ளிட்ட 50 கைதிகள் நடனமாட உள்ளனர்," என்றார்.












Click it and Unblock the Notifications