ஈழத் தமிழர்களுக்கோ, தமிழக மீனவர்களுக்கோ மத்திய அரசு அனுசரணையாக இல்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை.

இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான்.

இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசினால் துன்புறத்தப்பட்ட நேரத்தில், தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் 2 கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம் இலங்கை அரசுக்குத்தான் இந்தியா உதவி செய்கிறதே தவிர, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனுசரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடு்த்து வைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகிறது.

கடல் எல்லையைப் பாதுகாக்க இந்தியா இலங்கைக்கு வழங்கும் 2 போர்க் கப்பல்களில் இருந்துகொண்டு, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவர்.

2017-ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல் கூறப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட முயற்சியினை தொடக்கத்திலேயே நிறுத்திட வேண்டும்.இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்க்கவும் இந்தியா முன் வரவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+