3 வயது குழந்தையின் இதயம் சீராக துடிக்க ..நீங்கள் மனது வைத்தால் முடியும்..உதவுங்கள் ப்ளீஸ்
திருவள்ளூர்: ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த 3 வயது குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை அவசியமாக உள்ள நிலையில், குழந்தையின் ஆபரஷேனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள வினோத் குமார் டிராக்டர் மற்றும் கதிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை ஓட்டும் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (வயது 28).

இந்த தம்பதிக்கு பெரியக்குப்பம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ரிஷிவரம் என்ற பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தை பிறக்கும் போது உடல் எடை குறையாக இருந்தது. உடல் எடையும் அதிகரிக்கவில்லை. மேற்கொண்டு எந்த பாதிப்பு இல்லாததால் பெற்றோர்கள் இது குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால், ரிஷிவரமுக்கு 2 வயது ஆகும் போது தொடர் சளி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கு ரிஷிவரமுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

சமீபத்தில் பெரியக் குப்பம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ரிஷிவரமை பரிசோதித்த மருத்துவர்கள், ரிஷிவரமுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தனர். ரிஷிவரமுக்கு Arterial shunt/Fenestrated Interarterial Septum, RPA Stenosis என்ற பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த பாதிப்புக்காக ASD Closure + RPA Plasty- என்ற ஆரம்ப கால அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மற்றும் ஐசியூ& மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது மருந்துகள் என மொத்தம் ரூ.2,50,000 வரை செலவு ஆகும் என மதிப்பிடபட்டுள்ளது.

விவசாய பணிகளில் ஈடுபடும் வாகனத்தை ஓட்டும் வினோத்குமாரின் வருமானம் அவரது குடும்ப செலவுகளை ஈடுசெய்யவே போதுமானதாக உள்ளது. எனவே ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ரிஷிவரம் குடும்பத்தினரால் அறுவை சிகிச்சை செய்வதற்கான தொகையை திரட்ட முடியவில்லை.
நீங்கள் நினைத்தால் இந்த குழந்தைக்கு உதவி செய்யலாம். உங்களின் உதவி கிடைத்தால் இந்த குழந்தைக்கு உடனே ஆபரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications