1 வயது குழந்தை கார்குழலியின் இதயத்தை சீராக துடிக்க வைக்க மனது வையுங்கள்..ஹெல்ப் ப்ளீஸ்
சென்னை: ஒரு வயதே ஆன பெண் குழந்தை கார்குழலிக்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப் பார்த்தாலே பிரச்சினைகளை மறந்துவிடுவோம். நமது மனதில் ஒரு புத்துணர்ச்சி உருவாகும். ஆனால், ஒரு வயது குழந்தை கார்குழலியின் பெற்றோருக்கு அப்படியில்லை. தங்கள் குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர்கள் ஒவ்வொரு நொடியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த குழந்தை கார்குழலிக்கு ஒரு வயதே ஆகிறது. பெரம்பூரில் உள்ள வீனஸ் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் உமையாள் தம்பதியின் 2-வது குழந்தை கார்குழலி. கார்குழலியின் தந்தை சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
கார்குழலிக்கு பிறந்து 35 நாட்களே ஆன போது வழக்கமான தடுப்பூசி போடுவதற்காக அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர். அப்போது குழந்தைக்கு சளி பிடித்து இருந்ததால் தடுப்பூசியை போட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால், மருந்துகள் கொடுத்தாலும் சளி பிரச்சினை தீர்ந்தபாடில்லை. அதன்பிறகு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கார்குழலி கொண்டு சென்று பரிசோதித்தனர்.
அப்போதுதான் குழந்தை கார்குழலிக்கு மிகவும் சிக்கலான இதய பிரச்சினை பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், லாக்டவுன் காரணமாக அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் அறுவை சிகிச்சைக்கான நேரம் கிடைக்குமா? என அலைந்தும் கிடைக்கவில்லை. இறுதியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள முகாமில் கலந்து கொண்ட போது மேல் சிகிச்சைக்கா மியாட் மருத்துவமனையில் கார்குழலியை அனுமதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதயத்தில் மிகவும் சிக்கலான பாதிப்பான Large perimembranous VSD இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.2,60,000 (அறுவை சிகிச்சைகள், ஐசியூ படுக்கை, மருந்துசெலவுகள் உள்பட) தேவைப்படுகிறது.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தினரால் அவ்வளவு பெரிய தொகையை உடனடியாக திரட்ட முடியவில்லை. நீங்கள் நினைத்தால் இந்த குழந்தைக்கு உதவி செய்ய முடியும். உங்கள் உதவியால் ஆப்ரேஷன் செய்தால் குழந்தை பிழைக்கும்.. இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவியைச் செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்.

-
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்















Click it and Unblock the Notifications