சென்னை இன்ஜினியருக்கு ஜாக்பாட்.. எமிரேட்ஸ் லாட்டரியில் விழுந்த ரூ. 230 கோடி பரிசு
அபுதாபி: சென்னையைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் தனது பிறந்த நாளன்று கண்ணை மூடிக் கொண்டு தொட்ட லாட்டரி எண்ணால் அவருடைய வாழ்க்கையே மாறியுள்ளது. எமிரேட்ஸ் லாட்டரியில் ஓய்வு பெற்ற இன்ஜினியருக்கு ரூ. 230 கோடி பரிசு விழுந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் ராஜகோபாலன். ஓய்வு பெற்ற இன்ஜினியர். இவர் கடந்த மார் 16 ஆம் தேதி தனது பிறந்த நாளில் லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது, கண்களை மூடிக்கொண்டு செல்போனில் ஒரு நம்பரை தொட்ட நிலையில், அந்த நம்பருக்கு லாட்டரி விழுந்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராம் ராஜகோபாலன் கூறுகையில், " எனக்கு லாட்டரி விழுந்துள்ளது என்பதை முதலில் நான்நம்பவே இல்லை. டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன். வெற்றி பெற்ற எண்களின் ஸ்கிரீன் சாட் எடுத்து வைத்துக் கொண்டேன். என் கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை. மிகுந்த பயமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. இது மிகப்பெரிய தொகை.
இதுபோன்ற மிகப்பெரிய தொகையை நான் இதுவரை கையாண்டதில்லை. இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல. என் குடும்பம், எனது குழந்தைகள், படிக்கும் அனைவருக்குமான நம்பிக்கை இது. எமிரேட்ஸ் டிரா என்னை சரியான முறையில் வழிநடத்தியது. ஒவ்வொரு தந்தைக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல படிப்பையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் கொடுக்க வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும்.
இந்த லாட்டரி தொகை தலைமுறை தலைமுறைக்குமான செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக உள்ளது. எனக்கு சேவை செய்வதில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. புற்றுநோயால் நிறைய பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவில்கள், முதியோர் இல்லங்கள், புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு என செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
எப்போதுமே மனிதர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பார்கள். அதிர்ஷ்டம் என்பது எந்தவொரு வரைமுறையையும் பின்பற்றுவதில்லை. அதனால், விளையாடும்போது பொறுப்புடன் இருப்பது நல்லது. முடிந்ததை மட்டும் வாங்குவது, அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அனுபவிப்பது மட்டுமே இதில் உத்தி என்றார்.
இதுகுறித்து டைச்செரோஸின் தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டியன் கூறுகையில், "ரூ. 231 கோடி பெற்ற வெற்றியாளருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இதன் மூலமாக அவருடைய வாழ்க்கையும், அவருடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையும் மாற்றப்படும். எங்களுடைய வரலாற்றில் தனிநபர் ஒருவர் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார். பொதுமக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications