பிரான்ஸ் ஓவர்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி! அதிபரோடு இன்று முக்கிய மீட்டிங்!
அபுதாபி: 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரான்சில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். அங்கு அவர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் தேதி ‛பாஸ்டில் டே' என்ற பெயரில் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நேற்று அங்கு தேசியதினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோருக்கு பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களும், இந்தியாவின் முப்படை வீரர்களும் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உற்சாக பேசினார். பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும், உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும் என பூரிப்புடன் தெரிவித்தார்.

மேலும் இமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருதை இமானுவேல் மேக்ரான் வழங்கினார். மேலும் இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தற்போது பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஒருநாள் பயணமாக விமானத்தில் புறப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்சியின் அபுதாபியில் பிரதமர் மோடி இறங்கினார். இதையடுத்து பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஷயாத் அல் நஹ்யான் வரவேற்றார்.

இதையடுத்து பிரதமர் மோடி, அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச உள்ளார். இந்த வேளையில் எரிபொருள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். மேலும் இருநாடுகள் சார்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து இந்தியா புறப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications