அபுதாபி மோடி திறந்துவைத்த கோயிலில் நடைபெற்ற ஐ.ஜி.எப் கூட்டம்
அபுதாபி: இந்தியன் குளோபல் ஃபார்ம் (IGF) தலைவர்களின் சந்திப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது. 'IGF Leaders Dinner' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் தொழில்துறை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து இந்து கோயிலில் (BAPS Hindu Mandir) தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் கலாசாரம் தொடங்கி ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதில் இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகம் தூதர் சுஞ்சய் சுதீர், அபுதாபி இந்து கோயிலைச் சேர்ந்த பூஜ்ய பிரம்மவிஹாரி சுவாமிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பூஜ்ய பிரம்மவிஹாரி, "வாழ்வில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிற தலைவர்களிடம் ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். சில நேரம் உங்கள் இதயத்தின் குரலுக்கு செவி சாயுங்கள். அப்போது எதிர்மறை சிந்தனைகளும், அதாவது நோ என்பது கூட எஸ் என்று மாறும்.
ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் இல்லாவிடின் இந்த கோயில் அமைந்திருக்காது. இன்று நமக்குள் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை, நல்லிணக்கம், சாதனைகள் அனைத்துக்கும் அவர் முக்கிய காரணம்." என்று கூறினார்.
சுஞ்சய் சுதீர் பேசும்போது, "ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக மக்கள் வருகை புரிந்த இடமாக இந்த கோயில் உள்ளது. இது நல்லிணக்கத்தின் சின்னம். கோயில் என்பதை கடந்து தொலைநோக்கு பார்வையிலான தலைமைத்துவத்துக்கும் இது சான்றாக உள்ளது. பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கோயில் குறித்து அறிவித்தார். 2024 ஆம் ஆண்டு அவரே இந்த கோயிலை திறந்து வைத்தார்." என்றார்.
ஐ.ஜி.எப் நிறுவனத் தலைவர் மனோஜ் லட்வா பேசும்போது, "நம்பிக்கை என்ற மந்திர வார்த்தை தான் நம்மை இங்கு ஒன்றிணைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு வலுவடைந்துள்ளது. பிரதமர் மோடியின் நம்பிக்கை மற்றும் நட்புணர்வால், இந்த கோயில் உலகளவில் மனிதம் மற்றும் இயற்கைக்கான புனித சின்னமாக விளங்குகிறது." என்றார்.
துல்ஹா நிறுவனர் ஃபைசல் கொட்டி கொலன் கூறுகையில், "முந்தைய காலத்தில் ஆயுர்வேதம் சேவையாக இருந்தது. நவீன மருத்துவம் நம் உறுப்புகளை நோயாக கருதுகிறது. நாம் வெறும் உறுப்புகள் அல்ல. உடல், மனம், ஆவி அனைத்தின் கலவை நாம். இது அதை மீட்டெடுக்கும் நேரம்." என்றார்.
தலைமைத்துவம், ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய சூஹெல் செத், "இந்த கோயில் இந்து மற்றும் இந்து வாழ்வியல் முறையை பிரதிபலிக்கிறது. இது பாலைவனத்தில் உள்ள ஒரு சோலை. நல்ல ஆரோக்கியத்தை பெறுவதன் மூலம் நல்ல ஆன்மாவை பெற முடியும். அதற்கு இந்த கோயில் முன்னின்று வழிநடத்துகிறது." என்றார்.
பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பேசும்போது, "விளையாட்டு ஒற்றுமைக்கு முக்கிய பங்காற்றுகிறது. டென்னிஸ் பந்துக்கு மொழி புரியாது. 1.4 பில்லியன் மக்களை முன்னிறுத்தி விளையாடுவது மிகப்பெரிய மரியாதை. விளையாட்டு மூலம் 250 மில்லியன் குழந்தைகளை ஈர்ப்பதுதான் என்னுடைய அடுத்த இலக்கு. அதன் மூலம் நம் கலாசாரம், நம்பிக்கை, ஆற்றல் அனைத்தையும் அவர்களிடம் கொண்டு செல்வேன்." என்றார்.
இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 1,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்பம், காலநிலை, புதுமை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் பேசப்பட்டன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications