தனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபி வந்த பின் முதல் 6 நாட்கள் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டதாக சிஎஸ்கே கேப்டன் தோனி குறிப்பிட்டு உள்ளார்.

ஐபிஎல் தொடரை சென்னை அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது. சென்னை அணி மிகவும் மோசமாக தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில், எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்னை அணி இதில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று நடந்த போட்டியில் மும்பை சென்னைக்கு எதிராக 162 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் அதன்பின் அதிரடியாக ஆடிய சென்னை அணி 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தோனி பேட்டி

தோனி பேட்டி

இது தொடர்பாக தோனி அளித்த பேட்டியில், நாங்கள் முதலில் அணிக்கு வந்ததும் எல்லோரையும் தனிமைப்படுத்தினார்கள். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டோம். முதல் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். அந்த நாட்களில் யாருடனும் பேச முடியவில்லை.

6 நாட்கள் அந்த 6 நாட்கள்

6 நாட்கள் அந்த 6 நாட்கள்

அந்த 6 நாட்கள் மிகவும் கஷ்டமாக இருந்தது. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு இத்தனை நாட்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் திடீர் என்று உடனே வேறு ஒரு ரூமில் தனியாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டோம்.

தனிமை தனிமை எப்படி

தனிமை தனிமை எப்படி

தனிமையில் இருந்த நேரத்தில் யாரும் மன ரீதியாக உடைந்து போகவில்லை. யாரும் கோபம் அடையவில்லை. அதுவரை மகிழ்ச்சி. போட்டி வரை எல்லோரும் கட்டுக் கோப்பாக இருந்தனர். முதல் 14 நாட்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன்பின் பயிற்சி நன்றாக சென்றது.

உடல் உடல் எப்படி

உடல் உடல் எப்படி

லாக்டவுன் நேரத்தில் உடலை உறுதி செய்ய முடிந்தது. உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைக்க முடிந்தது. அணியில் இருக்கும் எல்லோரும் லாக்டவுன் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். அதற்கு வாழ்த்துக்கள். இன்னும் சில வாரம் இருக்கிறது. அதற்குள் முழுமையாக போட்டியை புரிந்து கொள்வோம்.

 சூழ்நிலை சூழ்நிலை எப்படி

சூழ்நிலை சூழ்நிலை எப்படி

இங்கே வருவதற்கு முன் இந்தியாவிலும் ஆலோசனை செய்தோம். அபுதாபியில் நன்றாக பயிற்சி எடுத்தோம். அதன் பலன் தற்போது தெரிந்து உள்ளது. பயிற்சி எடுக்கும் மைதானங்கள் போலவே போட்டி விளையாடும் மைதானங்களும் உள்ளது. கொரோனா காரணமாக சில கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் அது எதுவும் போட்டியை பாதிக்காது என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+