Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் “மாஸ்” காட்டிய மதுரை பொண்ணு.. அழகி போட்டியில் அசத்தல் வெற்றி! மேடையிலேயே கிடைத்த படவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: துபாயில் நடந்த சர்வதேச திருமதி அமீரகம் 2022 என்ற திருமணம் செய்தவர்களுக்கான அழகி போட்டியில் மதுரையை சேர்ந்த பெண் ஜனனி ஷங்கர் Mrs.Elegant என்ற பட்டம் வென்று இருக்கிறார்.

மதுரையை சேர்ந்த ஜனனி ஷங்கர். சென்னையில் குடியேறிய இவர் தற்போது அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தந்தை பஹ்ரைனில் பணிபுரிந்து வந்ததால் 4 வயதிலேயே பஹ்ரைனுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை இவர் பெற்றோர்.

கல்வி

கல்வி

எட்டாம் வகுப்பு வரை பஹ்ரைனில் உள்ள இந்திய பள்ளியில் படித்த அவர், 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளை திருச்சி தனியார் பள்ளியிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை திருச்சி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

சமூக பணி

சமூக பணி

சிறு வயதிலேயே கர்நாடக இசையினை கற்று வந்த இவர், சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரும், இவரது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் ரத்ததானம் செய்யும் பணியை கட்டாய கடமையாக செய்து வருகின்றனர். மேலும் ரத்ததானம் நடைபெறும் இடங்களில் தன்னார்வ பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர்.

அழகி போட்டி

அழகி போட்டி

தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது உணவுப் பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் இவர்கள் தவறவில்லை. நடிப்பதில் ஆர்வம் கொண்ட ஜனனி நடித்த குறும்படங்கள் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் துபாயில் நடந்த சர்வதேச அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று இருக்கிறார்.

2 வது லட்டு

2 வது லட்டு

அந்த மேடையிலேயே தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார். வெற்றி பெற்று திரும்பிய ஜனனிக்கு பஹ்ரைன் விமான நிலையத்தில், அவர் கதாநாயகியாக நடிக்கும் 'மித்ரா' திரைப்படத்தின் குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தனது வெற்றிகுறித்து ஜனனி ஷங்கர் தெரிவிக்கையில், "திருமணமான பெண்களுக்கு பொது இடங்களில் தன்னம்பிக்கையை வளர்ப்பதே தனது லட்சியம்" என்று கூறுகிறார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

அந்த மேடையிலேயே தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார். வெற்றி பெற்று திரும்பிய ஜனனிக்கு பஹ்ரைன் விமான நிலையத்தில், அவர் கதாநாயகியாக நடிக்கும் 'மித்ரா' திரைப்படத்தின் குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தனது வெற்றிகுறித்து ஜனனி ஷங்கர் தெரிவிக்கையில், "திருமணமான பெண்களுக்கு பொது இடங்களில் தன்னம்பிக்கையை வளர்ப்பதே தனது லட்சியம்" என்று கூறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+