இம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணி 2013ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 7 ஐபிஎல் சீசன்களில் ஒரு ஓபனிங் மேட்சில் கூட வெற்றி பெறாத நிலையில் இன்றைய போட்டியிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓபனிங் மேட்சில் கூட வெற்றி பெற்றதில்லை.

அபுதாபியில் ஐபிஎல் போட்டிகள் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கியுள்ளன.

முதல் போட்டி

முதல் போட்டி

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே பார்வையாளர்கள் இன்றி முதல் முறையாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது.

அதிக ஆர்வம்

அதிக ஆர்வம்

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பிறகு நடை பெறும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தோனி விளையாடுகிறார்.

டபுள் ட்ரீட் கொடுப்பாரா?

டபுள் ட்ரீட் கொடுப்பாரா?

தோனியை எப்போது க்ரவுண்டில் பார்ப்போம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இதுவே பெரிய ட்ரீட். டாஸ் வென்ற தோனி, ராஜ தந்திர கணக்குடன் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்கியிருக்கும் தோனி முதல் போட்டியிலேயே மும்பையை மண்ணை கவ்வ வைத்து டபுள் ட்ரீட் கொடுப்பாரா என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

ஒரு வெற்றிக்கூட இல்லை

ஒரு வெற்றிக்கூட இல்லை

இதனிடையே இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தலைமையில் 2013ஆம் ஆண்டு முதல் நடந்த போட்டிகளில் ஓபனிங் மேட்சில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இன்று நடைபெற்ற போட்டியையும் சேர்த்து 8 போட்டிகளில் ஓபனிங் விளையாடியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

கை கொடுக்குமா ரோஹித் ராசி?

கை கொடுக்குமா ரோஹித் ராசி?

2013ஆம் ஆண்டு முதல் இதற்கு முன்பு நடந்து முடிந்த 7 போட்டிகளிலும் தோல்வியையே தழுவிது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் இந்த ராசி சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் கைக்கொடுக்குமா என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+