அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெர்மனியிலிருந்து இன்று அப்படியே நேராக ”ஐக்கிய அரபு அமீரகம்” செல்லும் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

அபுதாபி: ஜெர்மனி பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல இருக்கிறார்.

Recommended Video

    PM Modi-யை தேடி வந்து பேசிய Joe Biden | G7 Summit 2022 | *World

    கடந்த ஜூன் 26 ஆம் தேதி ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஸ்க்லோஸ் எல்மாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டார்.

    வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.. 6 மாதங்களில் 5க்கும் மேல் பலி.. என்ன காரணம்? வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.. 6 மாதங்களில் 5க்கும் மேல் பலி.. என்ன காரணம்?

    இன்று ஜெர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேராக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருக்கிறார்.

    இந்தியா - அமீரக உறவு

    இந்தியா - அமீரக உறவு

    இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் சர்வதேச அரங்கில் நல்லுறவை பேணி வருவதுடன் பல ஆண்டுகளாக வர்த்தக தொடர்பை வைத்து இருக்கின்றன. அமெரிக்காவுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 வது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரர் இந்தியாதான். 34 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக குறிப்பிட்ட இடைவெளியில் இரு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது வழக்கம்.

    2019 அமீரக பயணம்

    2019 அமீரக பயணம்

    ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்ததால் சுமார் 3 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவில்லை. கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான, 'Order of Zayed' என்ற விருதை வாங்கச் சென்றார். அத்துடன் இந்தியாவின் ரூபே கார்ட் மற்றும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை ஒட்டி தபால் தலைகளை அவர் அமீரகத்தில் வெளியிட்டார்.

     மாறிய பயண திட்டம்

    மாறிய பயண திட்டம்

    அதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்திய அரங்கத்தை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டு இருப்பதால் இந்த ஆண்டு இருநாடுகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

    அதிருப்தியில் அரபு நாடுகள்

    அதிருப்தியில் அரபு நாடுகள்

    இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் புதிய அதிபர் ஷேக் முஹம்மது பின் சையல் அல் நஹ்யானை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி இருநாட்டு வர்த்தக உறவு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

    English summary
    PM Narendra Modi to visit UAE after completing Germany trips: ஜெர்மனி பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X