ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்த ஷேக் கலிஃபா பின் சையத் மறைவை தொடர்ந்து புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். அவர் மறைந்த ஷேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் ஜனாதிபதியாக இருந்தவரின் இரண்டாவது மகன் ஆவார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் சகோதரர் ஆவார்.

ஷேக் முகமது, ஷிக்கா ஷல்மா பின்ட் ஹம்தான் அல் நஹ்யானுடன் திருமணம் ஆகி நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர். இவர் தனது 18 வயது வரை அபுதாபி மற்றும் அல்ஐன் பள்ளிகளில் கல்வி கற்றார், பின்னர் அவர் மதிப்புமிக்க ராயல் மிலிட்டரி அகாடமி சண்டர்ஸ்ட்டில், சேர்ந்தார். அங்கு ஆயுதப் பயிற்சி, ஹெலிகாப்டர் ஒட்டுவது, பாராசூட்டுடன் குதிப்பது போன்ற பயிற்சியைப் பெற்றார்.
யுஏஇ ஆயுதப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியாக உள்ள அவர் தற்பொழுது யுஎயி விமானப்படையின் தலைமை தளபதி மற்றும் பைலட்டாக இருந்து வருகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவத்தில் பல பொறுப்பான பதவிகள் வகித்துள்ளார். எமிரேட் அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய அளவிலும் பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டையாடுவது மற்றும் பருந்துகள் வளர்ப்பதில் அவருக்கு மிகப்பெரிய அளவிலான ஆர்வம் உள்ளது. இது அவருடைய தந்தையிடம் இருந்து அவருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. MBZ, என்றும் அவரை அனைவரும் அழைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications