அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐக்கிய அமீரகத்தில் 12-15 வயது சிறார்களுக்கு.. பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி

Google Oneindia Tamil News

அபுதாபி: 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்த ஐக்கிய அமீரகம் அனுமதி அளித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்னும் கொரோனாவின் கோரத் தாண்டவம் முடியவில்லை. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பல நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐக்கிய அமீரகத்தில் தடுப்பூசி பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

UAE allows Pfizer Covid-19 dose for emergency use in 12-15-year-olds

உலகின் பெரும்பாலான நாடுகளிலும் 18+ மக்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 -15 வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசியைச் செலுத்த ஐக்கிய அமீரகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

இந்தத் தகவலை ஐக்கிய அமீரகத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ஐக்கிய அமீரகத்தில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Pfizer vaccine gets for emergency approval for 12-15-year-olds in UAE
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X