Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுபுர் ஷர்மாவை தொடர்ந்து.. அரபுலகில் கொதிப்பை ஏற்படுத்திய பில்கிஸ் பானு வழக்கு -அமீரக இளவரசி காட்டம்

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரக இளவரசி ஹெந்த் அல் காசிமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளையும் விடுவித்த குஜராத் அரசு - வலுக்கும் எதிர்ப்பு

    குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.

    கலவரம்

    கலவரம்

    இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

     பில்கிஸ் பானு

    பில்கிஸ் பானு

    28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

    கூட்டு பலாத்காரம்

    கூட்டு பலாத்காரம்

    அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது.

    11 பேருக்கு ஆயுள் தண்டனை

    11 பேருக்கு ஆயுள் தண்டனை

    ஆனால், சாட்சிகளை அழித்ததாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.

    விடுதலை

    விடுதலை

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு வழங்கப்பட்டது.

    அமீரக இளவரசி

    அமீரக இளவரசி

    இதுகுறித்து அமீரக இளவரசி ஹெந்த் அல் காசிமி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "வெறுப்பு பேச்சுகளால் கொலைகாரர்களாக, பாலியல் பலாத்கார குற்றவாளிகளாக மாறியவர்களை விடுதலை செய்தி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவதை பார்த்து கோபப்பட நீங்கள் பெண்ணியவாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாமோபோபியா என்பது உண்மை. இந்த அரக்கர்கள் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது 3 வயது குழந்தையின் தலையை நசுக்கி கொன்றவர்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+