21+.. இனி சினிமாவில் சென்சார் சீன் கிடையாது.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு.. எங்கேன்னு பாருங்க
திரைப்படங்களில் சென்சார் கிடையாது என்று ஐக்கிய அரசு அறிவித்துள்ளது
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி சர்வதேச அளவில் திரையிடப்படும் வயது வந்தோருக்கான திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட மாட்டாது என்றும், பெரியவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமீரக அரசு ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டள்ளது.
பொதுவாக, வயது அடிப்படையில் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.. வயது வந்தோருக்கான திரைப்படங்களை காண குறைந்தபட்சம் இத்தனை வயது இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது..
அந்த 18 வயதுக்கு கீழ், மற்றும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்காகவே படங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வயது வரம்பில்தான் அமீரக அரசில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது..

காட்சிகள்
குறிப்பாக, ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகும் திரைப்படங்களில் சென்சார் மூலம் காட்சிகளை நீக்குவதற்கு பதிலாக 21+ என்ற புதிய பிரிவை எமிராட்டி மீடியா ஒழுங்குமுறை ஆணையம் மூலம் செயல்படுத்தப்போவதாக ஐக்கிய அமீரக ஊடகத்துறை அறிவித்துள்ளது... சர்வதேச திரைப்பட வெளியீடுகளில் அமீரகத்தில் அனுமதி அளிக்கப்பட்டாலும் வயது வந்தோருக்கான கருப்பொருள் கொண்ட திரைப்படங்களில் காட்சிகள் வெட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறையும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அமீரகம்
இது குறித்து ஒரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "அனைத்து நாடுகளில் உள்ளது போல் அமீரகத்திலும் சினிமாவை பார்க்கும் பார்வையாளர்களின் வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது... அதன்படி, பெரியவர்கள் மட்டும் பார்க்கும் சினிமாக்களுக்கு சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.. ஏற்கனவே வயது அடிப்படையில் பெரியவர்கள் பார்க்கும் சென்சார் செய்யப்படாத சினிமாக்களை பார்க்க, குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விதிமுறை
இதில் இப்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, வயது வந்தோருக்கான சினிமாக்களை பார்க்க, குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படுகிறது... அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வெளியிடப்படும் திரைப்படக் காட்சிகளிலும் இனி எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது, அதேபோல சென்சார் காட்சிகளும் நீக்கப்படாது. இந்த திரையரங்குகளில் 21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்..

புதிய விதி
அமீரகத்தில் சர்வதேச திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் வயது வந்தோருக்கான காட்சிகள், அல்லது பாரம்பரிய உணர்வை புண்படுத்தும் காட்சிகள் நீக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த புதிய விதிமுறையின் படி இனி சர்வதேச திரைப்படங்கள் திருத்தப்படாமல் திரையிடப்படும் என்றும், அந்த திரையரங்குகளில் 21 -வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தகையை திரைப்படங்களை பார்க்க, அனைவரும் தங்கள் வயதிற்கான அடையாள ஆவணம் அல்லது சர்ட்டிபிகேட் காட்டுவது அவசியமாகும்...

வீடுகள்
வீடுகள் மற்றும் விமானங்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களில் மட்டும் வயது வந்தோருக்கான காட்சிகளில் மாற்றம் அல்லது நீக்கம் செய்யப்படும்... விரைவில் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் வருகிற 2022ம் ஆண்டு முதல் வெளியாகும் திரைப்படம் மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கு சென்சார் கட் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை அங்கு பெற்று வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications