‘10 பேர் சினிமாவை அழிக்கிறார்கள்..’ நடிகர்கள் முதல் யூடியூபர்கள் வரை.. புட்டு புட்டு வைத்த வடிவேலு
சென்னை: தமிழ் சினிமாவில் முன்பு ஒரு படம் 300 நாட்கள் ஓடிய காலம் உண்டு. தற்போதைய காலத்தில் படம் முதல் வாரத்தை கடப்பதே கடினமாக உள்ளது. சொல்லப் போனால் முதல் காட்சியை தாண்டவே பயப்படுகிறார்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் தோல்வியடைவதாக திரைத்துறையினர் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு யூடியூபர்கள் மற்றும் நடிகர்களின் சதி செயல்கள் குறித்து வெளிப்படையாக புகார் வைத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலுவின் பேச்சுதான் ஹைலைட். சமூகவலைதளங்களில் யூடியூபர்கள் விமர்சனம் என்கிற பெயரில் திட்டமிட்டு படத்தை தோல்வியடைய செய்கிறார்கள். இதில் சிலர் நடிகர்கள் தயாரிப்பாளர்களின் பங்கு இருக்கிறது என்று அவர் உடைத்து பேசியுள்ளார்.

10 பேர் சினிமாவை அழிக்கிறார்கள்
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வடிவேலு, "காசு கொடுத்து படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள். 10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு திரைக்கலைஞர்களை தவறாக பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும். போர் கால அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர்கள் சதி
திரைத்துறையில் சிறிய கலைஞர்கள் பெரிய கலைஞர்கள் என்று பார்க்காமல் நடிகர்களை தவறாக பேசும் யூடியூபர்களுக்கு நடிகர் சங்கம் ஆப்பு வைக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்கிற பெயரில் அவதூறு செய்வோருக்கு சிலர் உடந்தையாக உள்ளனர். சிலர் தங்களின் படம் ஓட வேண்டும் என்பதற்காக போட்டி நடிகர்களின் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை உருவாக்கி தோல்வியடைய செய்கிறார்கள்.
தூங்கவிடக் கூடாது
இதை நடிகர் சங்கம் தான் தடுக்க வேண்டும். அவதூறு பரப்புவோரை தூங்க விடாமல் நடிகர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். முதல் நாளே ரசிகர்களிடம் ஊடகங்கள் விமர்சனம் வைப்பதை முறைப்படுத்த வேண்டும். ரோபோ சங்கர் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைய தினம் நான் ஊரில் இல்லை. அதனால் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தவில்லை. விரைவில் அவரின் வீட்டுக்கு செல்வேன்." என்றார்.
நடவடிக்கை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூச்சி முருகன், "அவர் சொன்னது நியாயமாக இருந்தாலும் அதற்கான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் நடிகர் சங்க உறுப்பினர்களை தவறாக பேசும் நபர்கள் மீது சட்டத்திற்குட்பட்ட காவல்துறையில் புகார் அளிக்கிறோம். தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். 3-4 பேர்கள் மீது இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "வடிவேல் அண்ணன் சொல்லியிருக்காரோ இல்லையோ. சக நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அவர் குரல் கொடுத்துள்ளார். இதை வைத்தும் வீடியோ போடுவார்கள். எங்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். நாங்கள் சுயமாக உழைத்து சம்பாதிக்கிறோம். அவர்கள் எங்களைப் பற்றி பேசி சம்பாதிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை திருத்த முடியாது. சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும்." என்றார்.
நாசர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "விமர்சனங்கள் இருக்கலாம். விமர்சனம் அறிவுரீதியாக அந்த துறையை பற்றி நன்கு தெரிந்து சொன்னால் நாங்கள் வளரவும் உதவியாக இருக்கும். அப்படி இல்லாதது தான் மனதுக்க கஷ்டமாக உள்ளது. சரியாக நடிக்கவில்லை என்றால் சொல்லலாம். அதை விட்டு தனிப்பட்ட வாழ்க்கை, படுக்கை அறை வரை செல்கிறார்கள். இது யாருக்குமே உதவாது." என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications